மிட்டாய் கவிதைகள்!

கரம் கொடுப்போம் - கரை சேரட்டும்!

August 09, 2013

karan koduppom

அன்பினை இழந்து
ஆசையைத் துறந்து
இன்பம் இன்றியே
ஈவது மட்டுமே
உண்டு வாழ்கிறான்
ஊக்கம் குறைந்து
எட்டிப் பார்க்கிறான்
ஏக்கத்தோடு,
ஐந்து வயதிலே
ஒடுங்கிப் போகிறான்
ஓடு போலே
ஔவை இல்லை
அஃதே காரணம்!

கரம் கொடுப்போம்
கரை சேரட்டும்!


எழுத்தாளர்: எம்.ஆர்.கார்த்திக்